ஆபாசப்படம் பார்ப்பதில் முதலிடம் வகிக்கும் தமிழகம் இந்த நிர்பயா நிதியை எப்படி பயன்படுத்தியிருக்கிறது என்றால், தமிழகத்தைப் பொறுத்தவரை நிர்பயா திட்டத்தில் ஒதுக்கப்பட்ட சுமார் 190 கோடி ரூபாயில் 6 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது
பெண்களுக்கெதிரான குற்றச் சம்பவங்களில், பாலியல் குற்றம் குறித்த விழிப்புணர்வு இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கும் அறிமுகமாகக் காரணமான சம்பவம் என்றால் அது 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த 'நிர்பயா' கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கு.
நாடாளுமன்றம் முதல் நாட்டில் ஒரு இடம் விடாமல் எல்லாத் திண்ணைகள் வரைக்கும் போய்ச்சேர்ந்த செய்தியான இது, ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் ஒரு உலுக்கு உலுக்கிய சம்பவம் என்றே சொல்ல வேண்டும்.