கோவையில் 17 வயது சிறுமி தனது பிறந்த நாளில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. டெல்லி நிர்பயா சம்பவத்திற்கு பிறகு கடும் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இரக்கம் காட்டாமல் அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் சீரநாய்க்கன்பாளையத்தில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி தான் இத்தகைய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுமி தனது 17வது பிறந்த நாளை காதலுடன் கொண்டாட பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார்.