தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கையை 40ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பகுதியும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி பகுதியும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பகுதியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதியும் பிரிக்கப்பட்டு தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்த்தப்பட்டது.
இதையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஆட்சியர்கள், காவல் கண்கானிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நிர்வாக பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.