ஜே.என்.யூவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹிந்து ரக்ஷா தளம் முழுமையாகப் பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் தலைவர் அறிவித்துள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹிந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளது.
டெல்லியில் உள்ள ஜேஎன்யூ என அறியப்படும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் படுகாயம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.