பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு பதில் மனு தாக்கல்
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவெடுத்த மத்திய அரசு, இது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவியிலும் தாக்கல் செய்து நிறைவேற்றியது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா சட்டமாகியுள்ளது.